என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் தாய், மகளை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகரை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 36). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் கஜலட்சுமி(10). நேற்று விருதுநகரில் உள்ள தெப்பக்குளத்தில் மகாலட்சுமி தனது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மகாலட்சுமியின் தாயார் ஜான்சிராணி விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளின் கணவர் பழனிவேல் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் மகளின் நடத்தையிலும் சந்தேகப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு சமரசம் பேசினர். ஆனாலும் பழனிவேல் தொடர்ந்து பிரச்சினை செய்ததோடு, தனது மகள் முன்பு மனைவியிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் மகாலட்சுமி தனது மகளுடன் தெப்பத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பழனிவேலை கைது செய்தனர்.
Next Story






