என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை அருகே சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கைது
Byமாலை மலர்5 March 2022 1:27 PM IST (Updated: 5 March 2022 1:27 PM IST)
நெல்லை அருகே 18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த தடியன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டி.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பெரியோர்கள் நிச்சயித்த இந்த திருமணம் சில தினங்களுக்கு முன்பு உறவினர்கள் சூழ நடந்தது.
இந்த நிலையில் திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் புதுப்பெண்ணுக்கு வயது 18 ஆகவில்லை என்றும், சிறுமிக்கு திருமணம் நடைபெற்று உள்ளதால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு சிலர் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மானூர் வட்டார சமூக நல அலுவலர் வெள்ளதாய், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் நெல்லை தாலுகா மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை என்று உறுதி ஆனதால், புதுமாப்பிள்ளை சமுத்திரபாண்டியை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Next Story
×