என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சங்கராபுரம் அருகே ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஏரியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் ஏரியில் இரண்டாவது மதகு பகுதியில் முதியவர் உடல் மிதப்பதாக ரிஷிவந்தியம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேரில் சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரரணயில் இறந்தவர் பிரிவிடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி(70) என்பதும், குளிக்கச் சென்ற போது ஏரி நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×