search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் ஏ.டி.டி.சி., மையத்தில் மெர்ச்சன்டைசிங் பயிற்சி வகுப்பு வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது

    ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிப்பு என ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து நுட்பங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் - அவிநாசி ரோடு கைகாட்டிபுதூரில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு (ஏ.டி.டி.சி.,) மையத்தில், மெர்ச்சன்டைசிங் பயிற்சி வகுப்பு வருகிற 7-ந்தேதி துவங்குகிறது. பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தோர் இப்பயிற்சியில் இணையலாம். தொடர்ந்து 6 மாதங்கள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1மணி மணி வரை வகுப்பு நடத்தப்படும்.

    நூல், துணி, டையிங், பிரின்டிங், ஆடை தயாரிப்பு ஆடைகளுக்கு விலை நிர்ணயம் செய்தல், ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிப்பு என ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து நுட்பங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இது தொடர்பான விவரங்களுக்கு 94864 75124, 88702 22299 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என  ஏ.டி.டி.சி., மையத்தினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×