search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    காண்டூர் கால்வாயில் பராமரிப்பு- விவசாயிகள் எதிர்பார்ப்பு

    காட்டாறுகள் கால்வாயை கடக்க ‘அண்டர் டனல்’ கீழ் மட்ட கால்வாய்கள் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ளன.
    உடுமலை:

    பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து உடுமலை திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 

    நான்கு மண்டல பாசனத்திற்கும் இக்கால்வாய் வழியாக பெறப்படும் தண்ணீரே ஆதாரமாக உள்ளது.

    சர்க்கார்பதி நீர் மின் நிலையத்தில் இருந்து தொடங்கி 40 கி.மீ.,க்கும் அதிகமாக வனப்பகுதியில் வரும் காண்டூர் கால்வாயில் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகும் பல்வேறு காட்டாறுகள் கடக்கின்றன. இவ்வாறு காட்டாறுகள் கால்வாயை கடக்க 'அண்டர் டனல்' கீழ் மட்ட கால்வாய்கள் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ளன.

    மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யும் போது காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் 'அண்டர் டனல்'களின் கொள்ளளவை தாண்டி வெள்ள நீர் செல்லும் போது காண்டூர் கால்வாயின் ஒரு பக்க கரையில் மண் அரிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. 

    நல்லாறு, கோமாளியூத்து பள்ளம், மத்தள பள்ளம், கரும்பாறை பள்ளம் உட்பட 6 இடங்களில் அமைந்துள்ள 'அண்டர் டனல்' பகுதிகளில் அதிக அரிப்பு ஏற்பட்டு காண்டூர் கால்வாய் கரைகள் பாதிக்கப்படும் நிலை தொடர் கதையாக உள்ளது.

    தொகுப்பு அணைகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கால்வாயில் வரும் போது இத்தகைய பிரச்சினைகள், பாசன காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    எனவே தொகுப்பு அணைகளிலிருந்து தண்ணீர் எடுக்காத போது காண்டூர் கால்வாய் 'அண்டர் டனல்' பகுதிகளில் பொதுப்பணித்துறையினர் முழுமையாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பி.ஏ.பி., விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    Next Story
    ×