என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு
கோபிசெட்டிபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோபிசெட்டிபாளையம்:
கோபிசெட்டிபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 43). விவசாயி. இவரது தந்தை அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
அவரது தந்தைக்கு நேற்று முன்தினம் உடல்நிலை சரியல்லாததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். இதையடுத்து வெங்கடாசலம் அவரது வீட்டை பூட்டி விட்டு இரவு தந்தை வீட்டிலேயே தங்கினார்.
இந்த நிலையில் வெங்கடாசலத்தின் வீட்டின் பூட்டை உடைத்து சிலர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த தங்க தாலிகொடி மற்றும் தங்க செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
காலை அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெங்கடாசலம் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






