என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ

    ராசிபுரத்தில் நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு 40 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர் குடும்பங்கள் உள்ளன.

    இந்த குடியிருப்பின் எதிரே எதிரே மக்காத குப்பைகளை நகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக கொட்டி வருகிறது. இங்கு துர்நாற்றம் வீசக்கூடிய குப்பைகளை கொட்ட வேண்டாம் என பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தூய்மை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்தும் தொடர்ந்து அதே இடத்தில் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் அந்த பகுதியே கரும் புகை மூட்டமாக காட்சியளித்தது. அருகே மின்மாற்றி இருந்த நிலையில் தீயணைப்பு துறையும் தீயை அணைக்க வராததால் பல மணி நேரமாக அங்கு உள்ள குப்பைகள் அனைத்தும் எரிந்து துர்நாற்றத்துடன் புகைமூட்டம் நிலவிய

    இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இரவு முழுவதும் குப்பை கிடங்கு பற்றி எரிந்தது.
    Next Story
    ×