என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வெப்பத்தை தணிக்க தர்பூசணி சாப்பிட்ட பெண்கள்.
பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெரியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெரியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
காலை 7 மணி வரை வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை.
அதன்பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள், வீட்டில் இருக்கும் பொது மக்கள் வியர்வையாலும், அனல்காற்றாலும் அவதி அடைந்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் குளிர்பானங்களை அதிக அளவில் விரும்பி குடித்து வருகின்றனர்.
குறிப்பாக கரும்பு பால், இளநீரை அதிக அளவில் விரும்பி குடிக்கின்றனர்.
இதைப்போல் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தர்பூசணி பழத்தை அதிக அளவில் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
இதற்காக கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட் டத்திற்கு தர்பூசணி அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது.
குறிப்பாக செங்கல்பட்டு, தர்மபுரி, திண்டிவனம் போன்ற பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் தர்பூசணி பழம் விற்பனைக்கு வருகிறது.
தர்பூசணி பழம் சூட்டை தணிப்பதுடன் உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
இதனால் தர்பூசணி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story






