என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்ட காட்சி.
கிரானைட் கற்கள் கடத்திய லாரி டிரைவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் கற்கள் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள எம்.பள்ளத்தூர் பகுதியில் லாரியில் அனுமதியின்றி கற்கள் கடத்து வதாக பர்கூர் தாசில்தார் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் தாசில்தார் பிரதாப் தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்தி வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்தியது தெரியவந்தது. உடனே லாரியை ஓட்டி வந்த ஜெகதேவி அடுத்துள்ள சின்னபனகமுட்லு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது23) என்பவரை பிடித்து மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மத்தூர் போலீசார் லட்சுமணனை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
Next Story






