என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நாளை இரவு முதல் விடிய விடிய நடக்கிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு விடிய விடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
மாலை 6 மணி முதல் காலை 4 மணி வரை 4 கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அப்போது நந்தி மற்றும் அருணாசலேஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபராதனை நடைபெறும்.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்படும்.
ஒவ்வொரு கால பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். நள்ளிரவு அர்த்தநாரீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்கள் மற்றும் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சிவராத்திரி அன்று தரிசனம் செய்தால் அது ஓருஆண்டு தரிசனம் செய்த பலன்களை வழங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இதனை பெண்களுக்கு ஒன்பது நாட்கள் நவராத்திரி ஆண்களுக்கு ஒரு நாள் சிவராத்திரி என்றும் சொல்வார்கள். சிவபெருமான் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகளுக்கும் அருள்பாலிக்க கூடியவர். அவரை அறியாமல் வழிபட்ட உயிரினங்களும் முக்தி அடைந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
எனவே நாளை சிவராத்திரி அன்று சிவனை தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவோம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவராத்திரி வழிபாடுகளில் பக்தர்கள் சரியாக பங்கேற்க முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு சிவராத்திரி விழாவில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






