என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொலைபேசி
உக்ரைனில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்- கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்துள்ளவர்கள் இருந்தால் அவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர்கள் உதவிக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி:
உக்ரைன் நாட்டிற்கும், ரஷ்யாவிற்கும் தற்போது போர் நடைபெற்று வருகிறது. எனவே உக்ரைன் நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்துள்ளவர்கள் இருந்தால் அவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர்கள் உதவிக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 04151-228801 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் செல்போன் எண் 9444605018, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசங்கரன் செல்போன் எண் 9453050814) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story






