என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  வள்ளியூர்- ஆரல்வாய்மொழி இடையே வழக்கம் போல் ரெயில்கள் இயங்கும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிர்வாக காரணங்களுக்காக இரட்டை ரெயில் பாதை பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையே வருகிற 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை வழக்கம் போல ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
  நெல்லை:
   
  வள்ளியூர் - ஆரல்வாய்மொழி  ரெயில் நிலையங்களுக்கு இடையே வருகிற 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடை பெற இருப்பதாக திட்டமிடப் பட்டிருந்தது.

  இதன் காரணமாக திருச்சி-திருவனந்தபுரம், - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில் (22627/22628), தாம்பரம்-நாகர்கோவில், தாம்பரம் அந்தியோதயா விரைவு ரெயில் (16191/16192) ‌ மற்றும் புதுச்சேரி- கன்னியாகுமரி, புதுச்சேரி வாராந்திர விரைவு ரெயில் (16861/16862) ஆகியவை மார்ச் 4-ந் தேதி முதல்  13-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு நெல்லை வரை மட்டுமே இயக்கப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  தற்போது வள்ளியூர்- ஆரல்வாய்மொழி இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நிர்வாகக் காரணங்களுக்காக  தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

  எனவே திருச்சி-திருவனந்தபுரம், -திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில், தாம்பரம் -நாகர்கோவில், தாம்பரம் அந்தியோதயா விரைவு ரெயில்  மற்றும் புதுச்சேரி- கன்னியாகுமரி, புதுச்சேரி வாராந்திர விரைவு ரெயில் ஆகியவை வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

  இத்தகவல் மதுரை தெற்கு ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  Next Story
  ×