என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
சத்தியமங்கலம் பகுதியில்அட்ட காசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத் துள்ள சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). விவசாயி.
இவர் தனது வீட்டில் ஆட்டுப்பட்டி அமைத்து 5 ஆடுகள் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் தனது 3 ஏக்கர் மஞ்சள் காட்டில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு இரவு வழக்கமான இடத்தில் கட்டி வைத்தார்.
பின்னர் நள்ளிரவு திடீரென நாய்கள் குறைக்கும் சத்தம் அதிகமாக கேட்டது.
இதையடுத்து முருகன் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் சத்தம் போட்டார். இதையடுத்து அந்த சிறுத்தை அங்கிருந்து சென்றது.
இதில் அங்கு கட்டி வைக்கப் பட்டு இருந்த 5 ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது தெரிய வந்தது.
உடனே இது குறித்து சத்தியமங்கலம் வனத் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
வனச்சரகர் பெர்னாட் தலைமையிலான வனத்துறையினர் சம்பவயிடம் வந்து சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய் தனர்.
மேலும் சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுத் தையை பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது:- சத்தியமங்கலம் பகுதியில் சிறுத்தைகள் அடிக்கடி புகுந்து கால் நடை களை அடித்து கொன்று வருகிறது.
தற்போது எங்கள் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story






