என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கிய போலீசார்
    X
    பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கிய போலீசார்

    பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு

    ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார்கள்.
    ஈரோடு

    ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார்கள்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று காலை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    பின்னர்   இன்ஸ்பெக்டர் ஜெயசுதா பொதுமக்களிடம்  கூறியதாவது:-
    ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி எங்களிடம் முன் பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது உங்களை தொடர்பு கொண்டால் உடனே அந்த அழைப்பை துண்டித்து விட வேண்டும். 

    குடும்பத்தினர் புகைப்படத்தை சமூக வலைத ளத்தில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.  பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் ஏதேனும் கேட்டால் உடனே அழைப்பை துண்டிக்க வேண்டும். 

    கடன் தருவதாக வங்கி மேலாளர் போல் தொலைபேசி அல்லது சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு பற்றிய விவரங்கள் மற்றும் முன்பணம் கேட்டால் கொடுக்கக் கூடாது.

    பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக பணம் கேட்டு மிரட்டினால் அருகில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கவும்.

    உங்களது செல்போன் தொலைந்தால் உடனடியாக பிளாக் செய்து விட வேண்டும். இல்லையென்றால் அந்த எண் தவறாக பயன்படுத்தக் கூடும்.
    பெட்ரோல் பங்க், ஷாப்பிக் மால்களில் ஆன்லைன் பண பரிவர் த்தனை செய்யும் போது கவனமுடன் செயல்பட வேண்டும். 

    உங்களிடத்தில் மொபைல் டவர் அல்லது காற்றாலை அமைக்க உள்ளோம் அதற்கு மாதம் பல ஆயிரம் வாடகை கிடைக்கும் எனவே அதற்கு முன் பல லட்சங்கள் கொடு த்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறினால் நம்ப வேண்டாம்.

    அறிமுகம் இல்லாத நபரிடம் வீடியோ கால் பேசுவதை தவிர்க்கவும். உங்கள் குழந்தைகள் பணம் செலுத்தி ஆன்லைனில் கேம் விளையாடுகிறார்களா? என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். 

    பயன்படுத்தப்படாத உங் களது வங்கி கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் வங்கி கணக்கை வேறு யாரேனும் தவறாக பயன்படுத்தக் கூடும்.
    உங்களது கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலில் விலை உயர்ந்த பரிசு விழுந்து உள்ளது. அதை பெறுவதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினால் அதை நம்பி ஏமாற வேண்டாம்.

    மேலும் ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டால் 1930 என்ற எண்ணிற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார்களை அளிக்க வேண்டும்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×