என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட வேலுச்சாமி.
    X
    தற்கொலை செய்து கொண்ட வேலுச்சாமி.

    போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்?

    குடும்ப தகராறு காரணமாக 50 அடி பள்ளத்தில் இருந்து குதித்து போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியமங்கலம்:

    குடும்ப தகராறு காரணமாக 50 அடி பள்ளத்தில் இருந்து குதித்து போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தியூர் நகலூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (41). இவர் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார், இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 7 வயதில் நித்தின் என்ற மகனும், 2 வயதில் ஹரீஸ் என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் சென்ற வேலுச்சாமி நேற்று வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் கடம்பூர் அருகே உள்ள மல்லியதுர்கம் கோன்பாறை என்ற இடத்தில் எஸ் வடிவ மலைப்பாதையில் வேலுச்சாமியின் கார் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.
    இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். 

    அப்போது கார் நிறுத்தப்பட்ட இடத்தில் வேலுச்சாமி இல்லாத நிலையில் அருகில் இருந்த பள்ளத்தில் இருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த வர்கள் உதவியுடன் பள்ளத்தில் இறங்கி தேடினர்.

    அப்போது வேலுச்சாமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து பள்ளத்தில் இருந்து கடும் போராட்டத் திற்கு பிறகு வேலுச்சாமியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு  ஆம்புலன்ஸ் மூலமாக  கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே இறந்து விட்டார்.

    இதைய டுத்து வேலுச்சாமி யின் உடல் பிரேத பரிசோத¬ னக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்ப ட்டது. 

    இதுகுறித் து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது உருக்கமான தகவல்கள் வெளிய £னது. வேலுச்ச £மிக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இதனால் வேலுச்சாமி மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் விடுமுறை முடிந்து வேலைக்கு வந்தபோது காரை மலைப்பாதையில் நிறுத்தி உள்ளார். பின்னர் அங்கிருந்து 50 அடி ஆழ கிடு, கிடு பள்ளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.  

    அப்போது அவர் விழுந்து சுமார் 1 மணி நேரம் கழித்துதான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சென்று மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் அவர் இறந்து விட்டார். அவர் பள்ளத்தில் விழுந்த உடன் மீட்டிருந்தால் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் யாருக்கும் இதுப்பற்றி தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×