என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி தாசில்தார் சிவா.கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    X
    பண்ருட்டி தாசில்தார் சிவா.கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு தனி பாதை குறித்து அதிகாரிகள் ஆய்வு

    கடலூர் சாலையில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய ஆஸ்பத்திரி கட்டிடம் வழியாக போலீஸ் நிலையங்களுக்கு சென்று வர வழி அமைக்க முடியுமா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி போலீஸ் லைனில் போலீஸ் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையம் உள்ளது. ஒதுக்கு புறமாகஉள்ள இங்கு எளிதில் சென்று வருவதற்கு தனி வழிபாதை கேட்டு இருந்தனர்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி தாசில்தார்சிவா.கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார். அவருடன் கிராம நிர்வாகஅதிகாரி, நகர நில அளவையர் ஆகியோர் சென்றனர்.

    கடலூர் சாலையில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய ஆஸ்பத்திரி கட்டிடம் வழியாக போலீஸ் நிலையங்களுக்கு சென்று வர வழி அமைக்க முடியுமா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    கடலூர் சாலையில் உள்ள பழைய ஆஸ்பத்திரி கட்டிடத்தில் தோட்ட கலை துறை சார்பில் உழவர் சந்தை திறக்க முடிவு செய்துள்ளதால் அந்த இடத்தை வழிப்பாதையாக பயன்படுத்தும் போது இந்த வழிப்பாதை அதற்கு இடையூறாக இருக்குமா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×