என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஈரோடு மாவட்டத்தில் 1,247 விவசாய மின்இணைப்புகள்
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1,247 விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1,247 விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தி ருந்தார்.
25 ஆயிரம்
விவசாயிகள்
இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், மின்வாரியம் சார்பில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கும் ஆணை வழங்கியது.
இதனை தொடர்ந்து மாதத்துக்கு 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கி 4 மாதத்துக்குள் நிறைவு செய்ய மின்வாரியம் திட்ட மிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பத்த நிலையில் முதற்கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு தர திட்டமிடப்பட்டது.
1,247 மின் இணைப்பு
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபி மின் பகிர்மான வட்டங்களில் இணைப்பு துரிதமாக வழங்கப்படுகிறது. இதில் ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில் 1,187 மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து 467 இணைப்பும், கோபி மின் பகிர்மான வட்டத்தில் 2,105 மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து 780 விவசாய மின் இணைப்பும் வழங்கப் பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story






