என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
உடுமலையில் வான்நோக்கும் நிகழ்ச்சி
உடுமலையில் நடந்த வான்நோக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் வானில் உள்ள நட்சத்திர தொகுதிகளை பார்த்து ரசித்தனர்.
உடுமலை:
நாட்டின் 75வது சுதந்திர தின விழா அமுத விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக ‘இரவு வான்நோக்கும் நிகழ்ச்சி’, செல்லம் நகர் குடியிருப்பு பகுதியில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், நிர்வாகி சதீஷ்குமார், உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலாளர் நாகராஜன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து வானவியல் சார்ந்த கருத்துருக்கள், செயல் விளக்கமும் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அனைவரும் தொலைநோக்கி வாயிலாக வானில் உள்ள நட்சத்திர தொகுதிகளை பார்த்து ரசித்தனர்.
Next Story






