என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகை தெற்கு பொய்கைநல்லூர் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
செல்லி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
நாகை அருகே செல்லி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூரில் பழமை வாய்ந்த பிரகன்நாயகி சமேத சுவர்ணபுரீஸ்வரர் மற்றும் செல்லி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மகா சண்டி ஹோமம் உற்சவத்தை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாடினர். இதனையடுத்து, மஹாதீபாராதனை காட்டப்பட்டன. தொடர்ந்து லலிதா சகஸ்ர நாம குங்கும அர்ச்சனையும், முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story






