என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
விபத்தில் டிரைவர் பலி
டி.என்.பாளையம் அருகே நடந்த விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே நடந்த விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம் அடுத்த கொண்டையம் பாளையம் சின்னகாளியூரை சேர்ந்தவர் முருகேசன் (40). இவர் மேட்டுப் பாளையம் அருகே உள்ள சிறுமு கையில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமுகை சென்று சம்பளம் வாங்கி கொண்டு முருகேசன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந் தார்.
அப்போது சத்தி- அத்தாணி சாலையில் கொண்டையம் பாளையம் அருகே வந்து கொண் டிருந்த போது வளைவில் திடீரென நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர இருந்த மரத்தில் மோதியது.
இதில் படுகாயமடைந்த முருகேசன் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






