என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

    அஞ்சல் துறை சார்பில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    அஞ்சல் துறை சார்பில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு அஞ்சல் கோட்டம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-  மாணவர்களுக்கு இடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க 9 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. 

    எதிர்காலநிலை நெருக்கடியில் அவர்கள் ஏன் மற்றும் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விளக்கி செல்வாக்கு மிக்க ஒருவருக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும். 

    தேசிய அளவில் 3 தபால் துறை, வட்ட அளவில் 3 என்ற வீதம் படைப்புகள் தேர்வு செய்யப்படும். சிறந்த படைப்புகள் சர்வதேச அளவிலான போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும். 

    ஆர்வமுள்ளவர்கள் வரும் மார்ச் மாதம் 4-ந் தேதி ஈரோட்டுக்கு நேரடியாக வந்து போட்டியில் பங்கேற்கலாம். வீட்டில் இருந்தவாறு எழுதுபவர்கள் வரும் 15-ந் தேதிக்குள் எழுதிய கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும். 

    தேர்வு நடக்கும் இடம், வீட்டில் இருந்து எழுதுபவர்கள் அந்த கடிதத்தை எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற விபரங்கள் www.indiapost.gov.in என்ற இணைய தள முகவரியில் அறியலாம். 

    தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 

    அஞ்சல் துறை வட்ட அளவில் தேர்வு செய்யப் படுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×