என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 பேர் கைது

    வடமாநிலத்தவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    வடமாநிலத்தவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று வரபாளையத்தை அடுத்த மொட்டணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வேன் ஒன்று வந்தது. 


    அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேனில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் கோபி, குருமந் தூரை சேர்ந்த  கார்த்தி (42), பழனி கவுண்டன்பாளையம் சத்யாநகர் காலனியை சேர்ந்த சின்ராசு (42) என தெரியவந்தது.

    அவர்கள் பெருந்துறையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு அரிசி கொடுப்பதற்காக கடத்தி சென்றதை ஒப்புக் கொண்டனர். 

    இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு  அவர்களிடம் இருந்த அரிசி, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×