என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க.
125 வார்டுகளை வென்றது தி.மு.க.
விருதுநகர் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் 125 வார்டுகளை தி.மு.க. வென்றது.
விருதுநகர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகள் உள்ளன. இதில் இடம் பெற்றுள்ளன 171 வார்டுகளில் தி.மு.க. 125 வார்டுகளை கைப்பற்றி யுள்ளது. அ.தி.மு.க. 15 வார்டுகளிலும், காங்கிரஸ் 12 வார்டுகளிலும், ம.தி.மு.க. 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 3, அ.ம.மு.க. 2, பா.ஜனதா 1 இடங்களை பிடித்துள்ளன.
இதே போல் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 143 வார்டுகளில் தி.மு.க. 92, அ.தி.மு.க. 21, இந்திய கம்யூனிஸ்டு 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 3, அ.ம.மு.க. 2, சுயேட்சைகள் 27 இடங்களை பிடித்துள்ளன.
மல்லாங்கிணறு பேரூராட்சியில் 15 வார்டுகளையும் தி.மு.க. வேட்பாளர்களே வென்றுள்ளனர். சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் தி.மு.க.-அ.தி.மு.க. தலா 7 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணி 8 இடங்களை வென்றிருப்பதால் இங்கு தி.மு.க.தான் தலைவர் பதவியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு பெரும் சரிவை தந்துள்ளது. கடந்த தேர்தலில் 7 நகராட்சிகளில் 6 அ.தி.மு.க. வசம் இருந்தது. 9 பேரூராட்சிகளில் 6 அ.தி.மு.க. கைப்பற்றி வந்தது. ஆனால் தற்போது அந்த கட்சி நகராட்சி, பேரூராட்சிகளை இழந்துள்ளது.
மேலும் பல வார்டுகளில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
Next Story






