என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  தருமபுரி நகராட்சியில் அ.தி.மு.க.-தி.மு.க. இழுபறி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தருமபுரி நகராட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தி.மு.க, அ.தி.மு.க.வும் மாறி மாறி வெற்றி பெற்றதால் இழுபறி நிலை இருந்து வந்தது.
  தருமபுரி:

  தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி  மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி அன்று நடந்து முடிந்தது. 

  தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூ ராட்சிகளிலும் 80.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. தருமபுரி நகராட்சியில் 81.37 வாக்குகள் பதிவானது. அதாவது தமிழகத்தில் நகராட்சிகளில் தருமபுரி நகராட்சியில் தான் அதிக வாக்கு சதவீதம் பதிவாகி இருந்தது.

  தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில்  நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் களை தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத் தில் வைக்கப்பட்டது.

   இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டுள்ளதை சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிக் கப்பட்டன.

  இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

  தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. , அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள்  மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 176 பேர் களத்தில் இருந்தனர். 

  தருமபுரி நகராட்சியில் வார்டு வாரியாக வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்கள் விவரம் வருமாறு:&

  1-வது வார்டு- தண்டபாணி (அ.தி.மு.க.)- வெற்றி.
  2-வது வார்டு-அலமேலு சக்திவேல் (அ.தி.மு.க.)- வெற்றி.
  3-வது வார்டு- பழனியம்மாள் -(அ.தி.மு.க.) வெற்றி.
  4-வது வார்டு-அம்பிகா (அ.தி.மு.க.)
  5-வது வார்டு-செல்வி (அ.தி.மு.க.).
  6-வது வார்டு-முன்னா (அ.தி.மு.க.)
  7-வது வார்டு- சத்யா (அ.தி.மு.க.).
  8-வது வார்டு- புவனேஸ்வரன்- (தி.மு.க.).
  9-வது வார்டு- மாதேஸ் வரன் (தி.மு.க.)

  தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மாறி மாறி வார்டுகளை கைப்பற்றி வந்ததால் இழுபறி நிலை இருந்து வந்தது.
  Next Story
  ×