என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
சேலம் மாவட்டத்தில், 27-ந்தேதி 3.66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சேலம் மாவட்டத்தில், 27-ந்தேதி 3.66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சுமார் 3 லட்சத்து 66 ஆயிரத்து 590 குழந்தைகளுக்கு 2,414 முகாம்கள் மூலம் ஒரே சுற்றில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த முகாம் சேலம் மாவட்டத்திலுள்ள 13 அரசு மருத்துவமனைகள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 298 துணை சுகாதார நிலையங்கள், 1,404 அங்கன்வாடி மையங்கள், 168 பள்ளிக்கூடங்கள், 16 தனியார் மருத்துவமனைகள், 77 போக்குவரத்து முகாம்கள் மற்றும் 172 பிற முகாம்களில் நடைபெற உள்ளது.
இது தவிர காரிப்பட்டி, தலைவாசல், ஓமலூர் மற்றும் வைகுந்தம் ஆகிய 4 சுங்கச்சாவடிகள், 2 ரெயில் நிலையங்கள், 44 பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், 7 திரையரங்குகள், 5 சந்தைகள், 4 வணிக வளாகங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகளில் மட்டும் தொடர்ந்து 3 நாட்கள் சொட்டு மருந்து முகாம் மூலமாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது.
5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் சமுதாய நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 27-ந்தேதி அன்று போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன், வருங்காலத்தில் போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story