என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கடையம் அருகே கன்றுகுட்டிகளை திருடி விற்க முயன்ற 2 பேர் கைது
கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் சொந்தமாக மாடுகள் வைத்துள்ளார். அவரது தொழுவத்தில் இருந்த 3 கன்றுகுட்டிகளை திருடி சந்தையில் விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 34). இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் மாடுகளை தனது தொழுவத்தில் கட்டி போட்டி ருந்தார். இந்நிலையில் நேற்று அங்கிருந்த 3 கன்று குட்டிகளை காணவில்லை.
இதனால் யாரேனும் திருடிச்சென்று சந்தைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று அவர் சந்தேகம் அடைந்தார்.
உடனே அவர் சந்தைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு 2 பேர் கணேசனுக்கு சொந்தமான 3 கன்று குட்டிகளையும் விற்க முயன்றனர்.
இதையடுத்து அவர் 2 பேரையும் பிடித்து ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2 பேரும் பாப்பான்குளத்தை சேர்ந்த சங்கர், குமார் ஆகியோர் என்பதும், லோடு ஆட்டோவில் கன்று குட்டிகளை திருடி கொண்டு வந்து விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு கைது செய்தனர். கன்றுகுட்டிகளை மீட்டனர்.

Next Story