என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருச்சி மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது
  X
  திருச்சி மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது

  திருச்சி, தூத்துக்குடி மாநகராட்சிகளை கைப்பற்றுகிறது திமுக

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி மாநகராட்சியில் 33 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
  சென்னை:

  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. 

  திருச்சி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

  இதில் 33 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது.அதிமுக ஒரு இடத்திலும், பிற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.இதையடுத்து திருச்சி மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது.

  தூத்துக்குடி மாநகராட்சி திமுக வசம் ஆகிறது

  இதேபோல், தூத்துக்குடி மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 38 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 

  4 வார்டுகளில் அதிமுகவும் 4 வார்டுகளில் பிற கட்சிகளும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை பலம் பெற்றதால் தூத்துக்குடி மாநகராட்சி திமுக வசம் ஆகிறது.


  Next Story
  ×