என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
மின்கட்டணம் வசூலிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரிக்கை
தற்போது மின்கட்டணம் செலுத்துவது கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளதால் கட்டணம் செலுத்தும் நேரத்தை மாலை 3.30 மணி வரை நீட்டிக்க மின் நுகர்வோர் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர்:
வீடு சார்ந்த மின் இணைப்புகள் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்களால் கணக்கீடு செய்யப்படுகிறது. மின் அளவு கணக்கீடு செய்யப்பட்டு பதிவாகியிருக்கும் பயன்பாட்டு அளவு, நுகர்வோர் மின் கணக்கீட்டு அட்டையில் குறிப்பிடுவதுடன் கம்ப்யூட்டரிலும் பதிவு செய்யப்படுகிறது.
அதன்படி மின் அளவு கணக்கிட்ட நாளில் இருந்து 19 நாட்களில் மின்கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. அந்தந்த பிரிவு அலுவலகங்களில், காலை, 8.30 முதல் மதியம், 12.30 மணி வரையிலும், அதன் பின் மதியம், 1.30 மணி முதல் 2.30 மணிவரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதையடுத்து வசூலிக்கப்பட்ட தொகையை சரிபார்த்து வங்கியில் செலுத்தப்படுகிறது. ஆனால் தற்போது, மின்கட்டணம் செலுத்துவது கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளதால் கட்டணம் செலுத்தும் நேரத்தை மாலை, 3:30 மணி வரை நீட்டிக்க மின் நுகர்வோர் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட மின் நுகர்வோர் கூறுகையில்,
மின்கட்டணம் ஆன்-லைனில் செலுத்த வசதி உள்ளது. ஆனால் இதுகுறித்து பலரிடம் விழிப்புணர்வு இல்லை. கம்யூட்டர் மையங்களில் மின்சாரம் இருக்கும் போது ஒரு கார்டுக்கு 10- ரூபாய், மின்சாரம் தடைபட்டு ஜெனரேட்டர் பயன்படுத்தினால் 15 ரூபாய் வரை கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.
வங்கிகளின் பணி நேரம் 4 மணி வரை இருப்பதால் மின்கட்டணம் வசூலிக்கும் நேரத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றனர்.
Next Story