என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திமுக
    X
    திமுக

    விருதுநகர் நகராட்சியை முதல்முறையாக கைப்பற்றியது தி.மு.க.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான வார்டுகளை தி.மு.க. கைப்பற்றி வருகிறது.
    விருதுநகர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

    இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் நகராட்சியை தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.

    மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக - 20, காங்கிரஸ் -8, அதிமுக - 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
    Next Story
    ×