என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னணு இயந்திரங்கள்
    X
    மின்னணு இயந்திரங்கள்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

    தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
    சென்னை:

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

    இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகளும், நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையில் 15 இடங்களில் நடக்கிறது. 

    வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வார்டு வாரியாக முழுமையாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரிய வரும். 

    வாக்கு எண்ணிக்கைக்காக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×