என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டம்
காஞ்சிபுரத்தில் வாக்குச்சாவடி முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
காஞ்சிபுரத்தில் வேட்பாளரை போலீசார் தாக்கியதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குச்சாவடி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணன் தெருவில் வாக்குச்சாவடி மையம் உள்ளது.
இங்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சூர்யாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே வேட்பாளர் சூர்யாவை போலீசார் தாக்கியதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குச்சாவடி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
Next Story






