search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குசாவடி மையத்தில் பணிபுரிவதற்கான ஆணை பெறுவதற்காக மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காத்திருந்த அரசு ஊழியர்
    X
    வாக்குசாவடி மையத்தில் பணிபுரிவதற்கான ஆணை பெறுவதற்காக மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காத்திருந்த அரசு ஊழியர்

    நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடக்கம்

    மதுரையில் நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.
    மதுரை

    மதுரை மாவட்டத்தில் நகர்புறஉள்ளாட்சி தேர்தலில் நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை 19-ந் தேதி நடைபெறுகிறது இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் களத்தில் போட்டியிடுகிறார்கள். 

    மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை மதுரை மாநகராட்சி மற்றும் மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 நகராட்சிகள், அலங்காநல்லூர்,ஏ. வெள் ளாளப்பட்டி, பாலமேடு, பரவை, வாடிப்பட்டி, சோழவந்தான், எழுமலை, பேரையூர், டி. கல்லுப்பட்டி ஆகிய 9 பேரூராட்சிகளிலும் மொத்தமுள்ள 322 வார்டு களுக்கு 1711 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    இதில் டி. கல்லுப்பட்டி, வாடிப்பட்டி, பாலமேடு ஆகிய பேரூராட்சிகளில் தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 7பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதியுள்ள 313 வார்டுகளுக்கு நாளை காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் நாளை நடைபெறும் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த தேர்தலில் சுமார் 15 லட்சத்து 78 ஆயிரத்து 136 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 532 பேரும், பெண்கள் 8 லட்சத்து 4 ஆயிரத்து 452 பேரும், இதரர் 152 பேரும் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர். வாக்காளர்களுக்கு அந்தந்த பகுதிகளில் பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் உள்ள 1, 615 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட் டுள்ளன. இதற்காக 7760 பணியாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். அவர் கள் இன்று பிற்பகலில் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று தேர்தல் பணியில் ஈடுபடு கிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் 127 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங் கள் மற்றும் வாக்காளர் பட்டியல், மை உள்ளிட்ட பொருட்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு வழங் கப்பட்டு மின்னணு எந்தி ரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. 

    மதுரை மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு மையங்களுக்கு 200 மீட்டர் தொலைவுக்கு வெளிநபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    வேட்பாளர்களின் முகவர்கள்,வாக்காளர்கள் தவிர மற்ற நபர்களை வாக்குச் சாவடிக்குள் செல்ல அனுமதி இல்லை. வாக்காளர்கள் அமைதியான முறையில் அச்சமின்றி வாக்களிக்க தைவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறுகிறது. மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர் கள் வரிசையில் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவை தொடர்ந்து நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு வருகிற 22-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×