என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்.
தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் போதிய வசதி உள்ளதா?-அதிகாரிகள் ஆய்வு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் போதிய வசதி உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் போதிய வசதி உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாளை ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூரா ட்சிகளில் நடைபெறும் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1,221 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள், வாக்காளர் மற்றும் வாக்குச் சாவடியில் பணி செய்வோர், வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேவை யான இருக்கை, குடிநீர், மின்சாரம் கழிப்பறை மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையிலான சாய்வு தளம், முதியவர் உடல் நலம் குன்றியோர் வந்து செல்லும் போது அமர்ந்து செல்ல இருக்கை, ஓட்டுச்சாவடி பணி செய்வோர் வேட்பாளர்களுக்கு தேவையான டேபிள், சேர் போன்றவற்றை ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அவரது உதவியாளர்கள் தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் சரியாக உள்ளதா? என்று குறித்து ஆய்வு செய்தனர்.
இவற்றை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்பாடு செய்தாலும், ஓட்டுச் சாவடி நிலை அலுவலருக்கு வழங்கப்பட்ட பட்டியல் படிவத்தில் அவற்றை உறுதி செய்தனர்.
மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் வேட்பாளர் பட்டியல் விபரம் ஒட்டப்பட்டுள்ளதையும், ஓட்டுப்பெட்டிகள் வைப்பு அறை, ஓட்டுப்பதிவுக்கு பின் அவற்றை எடுத்துச் செல்ல வாகனங்கள் வந்து செல்லும் பாதையையும் உறுதி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






