என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் சொக்கர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சொக்கர் கோவிலில் மாசிமக தேரோட்டம்
ராஜபாளையம் சொக்கர் கோவிலில் மாசிமக தேரோட்டம் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் சொக்கர் என்ற ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இங்கு தற்போது மாசிமக பிரம்மோற்சவ திருவிழா நடந்துவருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தோரோட்டம் நடைபெற்றது.
கோவில் பரம்பரை அறங்காவலராக பொறுப்பு வகிக்கும் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட் ராமராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மாசிமக தோரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கிவைத்தனர்.
முன்னதாக தேரில் சொக்கர்-மீனாட்சி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேர் முன்பு பல்வேறு வாத்திய மேளதாளங்களுடன் திருமுறை மன்றம், பஞ்சோபசார குழு, சைவ சித்தாந்த சபை மற்றும் சங்கரன்கோவில் அடியார்கள் குழு கலந்துகொண்டு பாடல்கள் பாடி சென்றனர்.
தோரோட்டத்தில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பெண்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராமமந்திரம், காந்தி கலைமன்றம் உள்ளிட்ட முக்கிய ரத வீதிகள் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது.
Next Story






