search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    60 நாம் தமிழர் வேட்பாளர்களை கடத்தி வாபஸ் பெற வைத்தனர்- சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு

    புதிய சமுதாயத்தை படைக்கவும், மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்தவும் தொடர்ந்து நாங்கள் போராடி வருகிறோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளன. ஆனால் அதில் எந்த பலனும் இல்லை.

    அ.தி.மு.க. இல்லை என்றால் தி.மு.க., தி.மு.க. இல்லை என்றால் அ.தி.மு.க. என்பது எப்படி மாற்று அரசியலாக இருக்க முடியும். தமிழகத்தில் இந்த 2 கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி உள்ளது. எனவே நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 60 பேரை கடத்தி சென்று வாபஸ் பெற வைத்துள்ளனர். பா.ஜனதாவை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு தி.மு.க. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சியை எதிர்த்து ஒரு இடத்தில் மட்டுமே போட்டியிட்டது. மற்ற இடங்களை எல்லாம் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு ஒதுங்கிவிட்டது.

    எங்கள் வேட்பாளர்களை கடத்தியது போன்று பா.ஜனதா வேட்பாளர்களை உங்களால் கடத்த முடியுமா? அதுபோன்று செய்தால் திகார் ஜெயிலில்தான் இருக்க வேண்டியது இருக்கும்.

    தமிழக மக்கள் இங்கு நடைபெறும் அநீதியை சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே நாம் தமிழர் கட்சி தொடர்ந்து களத்தில் இருக்கிறது. புதிய சமுதாயத்தை படைக்கவும், மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்தவும் தொடர்ந்து நாங்கள் போராடி வருகிறோம்.

    பழைய கட்டிடத்துக்கு பெயிண்ட் அடிக்க நாங்கள் வரவில்லை. கட்டிடத்தையே இடித்து விட்டு புதிய கட்டிடத்தை கட்ட முயற்சித்து கொண்டு இருக்கிறோம்.

    நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் எப்போதும் தனித்தே போட்டியிடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எங்களது வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

    நாங்கள் வாரிசுகளாக அரசியலுக்கு வரவில்லை. அடுத்த தலைமுறைக்காக புதிய அரசியலை முன்னெடுத்து களம் காண்கிறோம்.

    2 கட்சிகளும் தமிழகத்தை பலமுறை ஆண்டுள்ளன. ஆனால் என்ன சாதித்துள்ளனர். சுகாதாரமான சூழல் எங்கும் இல்லை. சிங்கார சென்னையாக மாற்றப் போகிறோம் என்றார்கள். ஆனால் எங்கு பார்த்தாலும் குப்பைகளாக காட்சி அளிக்கிறது.

    தி.மு.க. சொன்ன வாக்குறுதிகளில் 70 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக மு.க.ஸ்டாலின் சொல்கிறார். 90 சதவீதம் என்று உதய நிதி சொல்கிறார். நீங்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகளில் 7 சத வீதத்தை முழுமையாக சொல்லுங்கள் பார்க்கலாம்.

    உதயநிதி ஸ்டாலின் - முக ஸ்டாலின்

    தமிழகத்தில் வேலை வாய்ப்புகளில் 80 சதவீதம் அளவுக்கு வெளி மாநிலத்தவர்களே உள்ளனர். ஆனால் மற்ற மாநிலங்களில் 90 சதவீதம் அளவுக்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் இருக்கிறார்கள்.

    ரெயில்வே பணிகளில் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். இதன் மூலம் அந்தந்த மாநில மக்கள் உரிய பலனை பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின்போது நிருபர் ஒருவர் விஜய் மக்கள் இயக்கம் 100 இடங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதே? அவர் உங்களுக்கு போட்டியாக வருவார் என்று நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு சீமான் ஆவேசமாக பதில் அளித்தார். விஜய் என்னுடன் போட்டியிடுவதாக கூறினாரா? விஜய் மக்கள் இயக்கத்தினர் 100 இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதா? நான் 2 ஆயிரம் இடங்களில் வெற்றி பெற்றதாக கூறுவேன். அதை அப்படியே போடுவீர்களா? நாங்கள் 100 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் சொன்னாரா?

    நாங்கள் ஒரே சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். அவர்கள் சுயேட்சை சின்னத்தில் தனித்தனியாக போட்டியிட்டுள்ளனர். இது போன்று தேவை இல்லாமல் எல்லாம் கேட்கக் கூடாது என்று தெரிவித்தார்.

    Next Story
    ×