என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
ஒடிசாவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
ஒடிசாவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
ஒடிசாவில் இருந்து எர்ணாகுளம் நோக்கிசென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது அதில் இருந்து இறங்கி பயணிகளின் உடைமைகளை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி நாயகம் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒடிசாவை சேர்ந்த சமந்தா பிரதான், ரோகித் டிகால் ஆகியோர் 17 கிலோ கஞ்சாவை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story






