என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டம் காரணமாக திண்டுக்கல் தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது
திண்டுக்கல்லில் நில அளவையர்கள் போராட்டம்
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் நிலஅளவையர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல்:
தமிழ்நாடு நில அளவைத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிச்சுமையை குறைக்க வேண்டும், புற ஆதார ஒப்பந்தம் முறையில் ஆட்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும், நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் துணைத்தலைவர் சபரிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில் எங்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் திண்டுக்கல்லில் மட்டும் ரூ.10 லட்சம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
நில அளவையர், சர்வேயர்கள் பணிக்கு வராததால் தாலுகா அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story