என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழுதைப்பால் விற்பனை நடைபெற்ற காட்சி.
    X
    கழுதைப்பால் விற்பனை நடைபெற்ற காட்சி.

    அவினாசியில் கழுதைப்பால் விற்பனை ஜோர்

    நாள்பட்ட ஆஸ்துமா, தொடர்சளி. இருமல், தீராத தலைவலி உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு கழுதைப் பால் அருமருந்தாக உள்ளது.
    அவினாசி:

    அவினாசியில் கழுதைப்பால் வியாபாரம் படுஜோராக நடக்கிறது. பெரம்பலூரை சேர்ந்த சிலர் பெண் கழுதை மற்றும் அதன் குட்டியுடன் வந்து பொதுமக்களுக்கு அந்த இடத்திலேயே கழுதைப்பால் கறந்து விற்பனை செய்கிறார்கள். பொதுமக்கள் ஆர்வத்துடன் கழுதைப் பாலை விரும்பி அருந்துகின்றனர்.

    இது பற்றி கழுதைப் பால் வியாபாரி ஒருவர் கூறுகையில்:

    நாள்பட்ட ஆஸ்துமா, தொடர்சளி, இருமல், தீராத தலைவலி உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு கழுதைப் பால் அருமருந்தாக உள்ளது. ஒரு சங்கு கழுதைப்பால் ரூ .50 விலையாகும். இதை ஒரு வாரம் தொடர்ந்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.
    Next Story
    ×