என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    எத்தனை பிரச்சினை என்றாலும் பெற்றோரிடம் பெண் குழந்தைகள் பகிர வேண்டும்- மருத்துவ அதிகாரி அறிவுறுத்தல்

    இந்தியாவில் அதிக அளவில் பெண்குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சென்சுரி பவுண்டேசன் பள்ளி குழுமத்தை சேர்ந்த தி ஹோம் ஸ்கூலில் விஸ்டா 2022 விழிப்புணர்வு முகாம் நடந்தது. 

    இதில் தாராபுரம் பிஷப் செவிலியர் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவத்துறை தலைவர் லட்சுமிபிரியா பயிற்சியாளராக பங்கேற்று, மாணவர்களிடம் சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதலை பிரித்தறிதல் எப்படி என செய்முறை விளக்கம் மூலம் விவரித்தார்.

    அவர் கூறுகையில், 

    மற்றவர்களை அவர்களுடைய அனுமதி இன்றி தொடுவதே தவறு. இந்தியாவில் அதிக அளவில் பெண்குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆண் குழந்தைகளுக்கு பெண்களின் அருமைகளை கூறி வளர்க்க வேண்டும். 

    எத்தனை பிரச்சினை என்றாலும் பெற்றோரிடம் பெண்குழந்தைகள் பகிர வேண்டும். உடல் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். முளைகட்டிய பயிர்கள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். 

    2 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். அதிக நேரம் டி.வி., செல்போன் பார்ப்பதால் படைப்புத்திறன் குறைந்துவிடும் என்றார்.
    Next Story
    ×