என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
வெண்ணந்தூர் போலீஸ் நிலையம் எதிரே புளிய மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
வெண்ணந்தூர் போலீஸ் நிலையம் எதிரே புளிய மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராசிபுரம்:
வெண்ணந்தூரில் ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வெண்ணந்தூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள புளிய மரத்தின் கிளை சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர். பல்வேறு மரங்களில் கிளைகள் கவாத்து செய்யப்படாமல் இருப்பதால், அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
Next Story






