என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அனீஷ்சேகர் பேட்டி அளித்தபோது எடுத்த படம்.
    X
    கலெக்டர் அனீஷ்சேகர் பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

    மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்

    மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக கலெக்டர் அனீஷ்சேகர் கூறினார்.
    மதுரை

    மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு மாவட் டம் முழுவதிலும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வரு கின்றன. மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர் இன்று நிருபர்களிடம் தேர்தல் குறித்து கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘எனது வாக்கு; எனது எதிர்காலம்‘ என்ற தலைப்பில் வினாடி- வினா, வாசகங்கள் எழுதுதல், பாட்டுபாடுதல், காணொளி காட்சிகள் உருவாக்குதல், விளம்பர வடிவமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 

    இதற்கான படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து அடுத்த மாதம் மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட அனைவரும் போட்டியில் பங்கேற்கலாம். தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் எழுதலாம்.

    மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி முடிந்து விட்டது. பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 32 சதவீதம் பேருக்கு பூத்சிலீப் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு இன்று வழங்க ஏற்பாடுகள் செய் யப்பட்டு உள்ளன. தேர்தல் ஆணைய இணையதளத்தில் நீங்கள் எந்த பூத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. 

    மதுரை மாவட்டத்தில் 1615 வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 338 சாவடிகள் பதட்ட மானவை என்று இனம் கண்டறியப்பட்டு உள்ளது.
     
    அதில் 127 சாவடிகளில் லைவ் வீடியோ எடுக்கும் வகையில் சிசிடிவி கண்காணிப்பு காமிரா பொருத்தும் பணி நடக்கிறது. 211 சாவடிகளில் மைக்ரோ அப்சர்வர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். மதுரை மாவட்டத்தை பொறுத்த வரை 6 லட்சத்து 43 ஆயிரத்து 380 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண் காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

    வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் பணியில் 127 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மதுரை மாவட் டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை கட்டுப்பாட்டு அலுவல கத்துக்கு 8 புகார்கள் வந்தன. அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு உள்ளன. மதுரை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 760 தபால் வாக்கு கள்  உள்ளன  இதில் 20 சதவீதம் ஊரகப் பகுதிகளை சேர்ந்தவை ஆகும். இது வரை 4896 படிவங்கள் பெறப்பட்டு உள்ளன. 

    இதில் கிராமப்புறங்களில் இருந்து 552 படிவங்களும், நகர்ப்புற பகுதிகளில் இருந்து 4341 படிவங்களும் பெறப்பட்டு உள்ளன. அவற்றை உரிய அலுவலர் களுக்கு அனுப்பிவைக்கும் பணி நடந்து வருகிறது. தேர்தல் வாக்குச்சாவடியை பொருத்தவரை தடுப்பூசி நிபந் தனைகள் எதுவும் இல்லை. ஒரு வாக்குச்சாவடியில் 4 உயரதிகாரிகள் வீதம் பணியில் இருப்பார்கள். மதுரை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால், என்னிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    -இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×