என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரட்டுப்பள்ளம் அணையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
    X
    வரட்டுப்பள்ளம் அணையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    வரட்டுபள்ளம் அணையில் பறவைகள் கணக்கெடுப்பு

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
    அந்தியூர்:

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
     
    ஈரோடு மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. 

    இதன் ஒரு பகுதியாக அந்தியூர் வன சரகத்திற்கு உட்பட்ட வரட்டுப்பள்ளம் அணை, பெரிய ஏரி மற்றும் ஓடத்துறை ஏரி ஆகிய நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

    வனத்துறை களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் மூலம் கணக்கெடுப்பு இரண்டு நாட்களாக நடைபெற்றது.

    இந்நிலையில் இன்று மாலை மாவட்ட வன அலுவலர் கவுதம், வரட்டுப்பள்ளம் அணை நீர் நிலையில் பறவைகள் கணக்கெடுப்பு பணியினை ஆய்வு செய்தார்.

    அப்போது அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்ரசாமி உள்ளிட்ட வனத் துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×