என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லையில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததால் சாக்கடை கால்வாய் சீரமைப்பு

    நெல்லை பேட்டை 19-வது வார்டில் உள்ள பங்களா தெருவில் கழிவுநீர் ஓடை நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல், தேங்கி துர்நாற்றம் வீசியதால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நோட்டீஸ் போர்டு வைத்தனர்.
    நெல்லை:

    நெல்லை பேட்டை 19-வது வார்டில் உள்ள பங்களா தெருவில் கழிவுநீர் ஓடை நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல், தேங்கி துர்நாற்றம் வீசியது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சாக்கடை கால்வாயை சீரமைக்காவிட்டால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நோட்டீஸ் போர்டு வைத்தனர்.

    இதனால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து இன்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், அந்த பகுதியில் கழிவு நீரோடையை சீரமைத்தனர்.

    கழிவு நீர் தேங்காதவாறு ஓடையை ஜேசிபி மூலமும் சரி செய்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர்.
    Next Story
    ×