என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நிலக்கோட்டையில் பெண்ணை கொல்ல முயன்ற 2 பேர் கைது
நிலக்கோட்டையில் பெண்ணை கொலை செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
நிலக்கோட்டை:
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மும்மூர்த்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேதுராமனை தாக்க முயன்ற போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விலக்கி விட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மும்மூர்த்தி, முத்து விருமாண்டி, பால்ராஜ், ராணி மற்றும் சிலர் நேற்று இரவு சேதுராமனின் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதுடன் இதை தடுக்க வந்த இந்து மதியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த இந்துமதி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகர் அளித்தார். அதன் பேரில் மும்மூர்த்தி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜ் மற்றும் ராணி ஆகியோரை கைது செய்தனர்.
Next Story






