என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூமாதேவி ஆலயத்தில் பிரதிஷ்டை விழா சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்தபடம்.
    X
    பூமாதேவி ஆலயத்தில் பிரதிஷ்டை விழா சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்தபடம்.

    கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் பிரதிஷ்டை விழா

    கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பு பூமாதேவி ஆலயத்தில் மகாமேரு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பு பூமாதேவி ஆலயத்தில் மகாமேரு பிரதிஷ்டை விழா மற்றும் மாசி முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அன்னதான பூஜை நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் திருப்பள்ளியெழுச்சி மற்றும் காலை பூஜையும் கணபதி பூஜை, புன்யவாஷனம், கும்பபூஜை, கணபதி ஹோமம், ஸ்ரீ சக்கர ஹோமம், மூலமந்திர ஜெபம் நடைபெற்றது.

    அதைதொடர்ந்து அம்பாளுக்கு மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் பூர்ன கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார்கள்.

     இதில் சுப்பாராஜ், மாரியப்பன், முருகன், ஆறுமுகம், கோபாலகிருஷ்ணன், வெங்கடேஷ் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய், சங்கரி மற்றும் ஊர் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். நிறைவாக அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

     இவ்விழா ஏற்பாடுகளை பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்.
    Next Story
    ×