என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
கழிவுநீரை திறந்து விட்ட பிரிண்டிங் நிறுவனத்தில் மின்சாரம் துண்டிப்பு
பிரின்டிங் நிறுவனம் கழிவுநீரை சுத்திகரிக்காமல் சின்னக்கரை ஓடையில் திறந்து விட்டுள்ளனர்.
திருப்பூர்:
சாய, சலவை ஆலைகள் போன்று பிரின்டிங் நிறுவனங்களும் கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்க வேண்டும் என்பது விதிமுறை. திருப்பூரில் சில பிரின்டிங் நிறுவனங்கள் சுத்திகரிக்காத சாய நீரை திறந்துவிட்டு இயற்கையை பாழ்படுத்துகின்றன. முருகம்பாளையம் அருகே தனியார் பிரின்டிங் நிறுவனம் உள்ளது.
மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெற்றுள்ள இந்நிறுவனம், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளையும் நிறுவியுள்ளது. ஆனாலும் பிரின்டிங் நிறுவனம் கழிவுநீரை சுத்திகரிக்காமல் சின்னக்கரை ஓடையில் திறந்து விட்டுள்ளனர்.
பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் வடக்கு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பிரின்டிங் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது கழிவுநீரை ஓடையில் திறந்துவிட்டதை கண்டறிந்தனர்.
இதையடுத்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் பரிந்துரைப்படி பிரின்டிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். இதனால் அந்நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
Next Story






