என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை
திருப்பூரில் தலையை துண்டித்து வாலிபர் படுகொலை- 5 பேர் கும்பல் வெறிச்செயல்
பனியன் நிறுவன தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த தனபால் மகன் ரஞ்ஜித் (22). நண்பர்களான இவர்கள் இருவரும் திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அங்குள்ள அறையில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தனர்.
நேற்றிரவு 2பேரும் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு தங்கியிருந்த அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5பேர் கொண்ட கும்பல் திடீரென சதீஷ், ரஞ்ஜித்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனை தட்டிக்கேட்ட 2பேரையும் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருப்பூர் கடுக்காதோட்டம் பகுதியில் உள்ள மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த 5பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சதீசையும், ரஞ்ஜித்தையும் சரமாரி தாக்கியுள்ளனர். இதில் ரஞ்ஜித்துக்கு உடலின் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.
இதையடுத்து அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி அங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றார். ரத்த வெள்ளத்தில் ரஞ்ஜித் ஓடி வருவதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் அவரிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்தனர். பின்னர் இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே ரஞ்ஜித் மயக்கமடைந்தார்.
இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஞ்ஜித்தை 108ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மயக்கம் தெளிந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது நண்பன் சதீஷ் கும்பலிடம் சிக்கிக்கொண்டதாகவும், எனவே அவனை காப்பாற்றுமாறும் போலீசாரிடம் தெரிவித்தார்.
உடனே போலீசார் கடுக்காதோட்டம் பகுதியில் உள்ள மைதானத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு சதீஷ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். ஆனால் தலையை காணவில்லை. 5பேர் கும்பல் சதீஷ் தலையை துண்டித்து கொலை செய்ததுடன் தலையை அங்கிருந்து எடுத்து சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் துண்டிக்கப்பட்ட தலையை அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் உடலை மட்டும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் கடுக்காதோட்டம் பகுதியில் மோப்ப பிடித்தவாறு சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
சதீசை கொன்ற கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. பணம், செல்போனை பறிக்கும் நோக்கில் சதீசை கடத்தி சென்ற நபர்கள் அவரை தலை துண்டித்து கொலை செய்தனரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடுக்காதோட்டம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் திருப்பூரில் இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் உடலை திணித்து கழிவுநீர்கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பனியன் நிறுவன தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story