என் மலர்
உள்ளூர் செய்திகள்

முட்டை
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணய நேரம் மாற்றம்
ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் முட்டை விலை நிர்ணயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100 கோழிப் பண்ணைகளில் முட்டை உற்பத்தி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணய அடிப்படையிலேயே வெளிச்சந்தைகளில் முட்டைகளை விற்பனை செய்கின்றனர்.
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், பரமத்தி, புதன்சந்தை, ராசிபுரம், ஈரோடு போன்ற பகுதிகளை உள்ளடக்கி ஒருங்கிணைப்புக் குழுவின் துணை அலுவலகங்கள் செயல்படுகின்றன. வாரந்தோறும் திங்கள், வியாழன், சனி ஆகிய நாள்களில் காலை 6 மணியளவில் முட்டை விலை நிர்ணயம் குறித்த அறிவிப்பை நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. செல்வராஜ் வெளியிடுவார்.
தற்போது இந்த 3 நாள்களுக்கு மாற்றாக, ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் முட்டை விலை நிர்ணயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

Next Story