search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெபாசிட்
    X
    டெபாசிட்

    இழப்பீட்டு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்

    அசம்பாவிதம் நிகழ்ந்தால் இழப்பீட்டு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை கோர்ட்டு பரிந்துரை
    மதுரை

    சிவகங்கையை சேர்ந்த ஆறுமுகம், புனித அருளானந்தர் ஆலயத்தின் தேரை, ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர் கோவில் வழியாக கொண்டு செல்ல அனுமதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “ விசாரணையின்போது ஏற்கனவே அருளானந்தர் ஆலயத்தின் தேர் பவனியை கோவில் வழியாக கொண்டு சென்றபோது, தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் கோவிலில் தேர் சேதமடைந்ததால், இரு குழுக்களுக்கிடையே பிரச்சினை எழுந்ததாகவும் தெரிய வருகிறது. 

    அதை தொடர்ந்து அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஆலயத்தின் தேர் சொர்ணகாளீஸ்வரர் கோயில் வழியாக கொண்டு செல்லப்படக்கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஆலயத்தின் தேரானது சொர்ண காளீஸ்வரர் கோவில் வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

    இனிவரும் காலங்களிலும் அமைதிப் பேச்சு வார்த்தையில் விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஆலயத்தில் தேரை கோவில் வழியாக கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதிக்கக்கூடாது. இனிவரும் காலங்களில் அனுமதி கோரி ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், அதற்கான இழப்பீட்டுத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

    தொடர்ந்து அரசியல் அல்லது மதம், கூட்டமைப்பு சார்ந்த ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க, அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதற்கான இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்காக முன்கூட்டியே டெபாசிட் செய்வதும் அவசியம் என விதிகளை கொண்டு வரலாம் என தமிழக அரசு, தமிழக காவல்துறை தலைவருக்கு பரிந்துரைப்பதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×