என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூலகம் அமைக்க புத்தகங்கள் வழங்கல்.
    X
    நூலகம் அமைக்க புத்தகங்கள் வழங்கல்.

    குத்தாலம் பள்ளியில் நூலகம் அமைக்க புத்தகங்கள் வழங்கல்

    குத்தாலம் பள்ளியில் நூலகம் அமைக்க புத்தகங்கள் வழங்கப்பட்டது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூலகம் அமைப்பதற்கு காவல்துறை சார்பில் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட துணை சூப்பிரண்டு வசந்தராஜ் கலந்துகொண்டு பள்ளியில் நூலகம் அமைப்பதற்கு புத்தகங்களை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். 

    மேலும் புத்தகங்கள் படிப்பதன் அவசியம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவது, கல்வியை எவ்வாறு கற்பது உள்ளிட்டவைகள் குறித்தும் மாணவர்களிடையே பேசினார். இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார், தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×